புஷ்பா 2 படத்தில் மேலும் 20 நிமிட காட்சிகள் இணைப்பு

ஐதராபாத்: பி.சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், லீலா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிபெற்று, வசூலிலும் சாதனை படைத்துள்ள படம், ‘புஷ்பா 2: தி ரூல்’. தற்போது இப்படத்தில் கூடுதலாக 20 நிமிடங்கள் ஓடும் காட்சியை இணைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கூடுதல் காட்சிகளுடன் இப்படத்தை வரும் 11ம் தேதி முதல் தியேட்டரில் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதை ‘ரீ-லோடட் வெர்ஷன்’ என்று படக்குழு புரமோட் செய்து வருகிறது.

ஏற்கனவே 3 மணி நேரம் 20 நிமிடங்கள் படம் ஓடுகிறது. இனி 3 மணி 40 நிமிடம் ஓடும். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு தேவி பிரசாத் இசை அமைக்க, சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். தற்போது இப்படம் சம்பந்தமாக ஏகப்பட்ட பிரச்னைகளில் சிக்கியிருக்கும் அல்லு அர்ஜூன், அடுத்து த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: