முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருவதாக, மாளவிகா மோகனன் மீது பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால், அதுபற்றி சிறிதளவும் கவலைப்படாமல், முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர், நாள்தோறும் தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், பிரபாஸ் நடித்து வெற்றிபெற்ற ‘சலார்’ என்ற படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை இழந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளியான ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களின் தீவிர ரசிகை நான். அப்படங்களை இதுவரை நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன் என்றே தெரியாது.
அப்படங்களில் பிரபாஸின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போது முதல் எப்படியாவது பிரபாஸ் ேஜாடியாக நடித்துவிட வேண்டும் என்ற ஆசையில், அதற்கான வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். அப்போது ‘சலார்’ படத்தின் மூலம் அந்த வாய்ப்பு என்னைத்தேடி வந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதை நினைத்து பலமுறை அழுதேன்’ என்றார். ‘சலார்’ படத்தை தவறவிட்டாலும் கூட, தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ என்ற படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். வரும் ஏப்ரல் 10ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதில் நிதி அகர்வால் இருப்பதால், பிரபாஸ் ஜோடி யார் என்பது சஸ்பென்ஸ்.