கர்ப்ப கால போட்டோ ஷூட்: ராதிகா ஆப்தேவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு

மும்பை: கடந்த 2005ல் இந்தி யில் வெளியான ‘வா! லைஃப் ஹோ தோ ஹைசி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், ராதிகா ஆப்தே (39). பிறகு தமிழில் பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த ‘தோனி’ என்ற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச்செல்வன்’, ‘கபாலி’, ‘சித்திரம் பேசுதடி 2’, ‘மெரி கிறிஸ்துமஸ்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். சில இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் நிர்வாணமாக நடித்தும், படுக்கையறைக் காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

2016ல் வெளியான ‘பர்சேத்’ என்ற படத்தில் நிர்வாணமாக நடித்தார். ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ படம் மற்றும் விளம்பரத்தில் உடலழகை வெளிப்படுத்தி நடித்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார். தெலுங்கு, தமிழ், மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கும் அவர், திரைத்துறை பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். கடந்த 2012ல் பிரிட்டிஷ் வயலின் கலைஞரும், இசை அமைப்பாளருமான பெனடிக்ட் டெய்லர் என்பவரை காதல் திருமணம் செய்த ராதிகா ஆப்தே, 12 வருடங்களுக்குப் பிறகு தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.

கடந்த 14ம் தேதி அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, குழந்தை பிறப்பதற்கு முன்பு எடுத்த போட்டோக்களை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டார். குறிப்பாக, வலை போன்ற உடை அணிந்த சில போட்டோக்களை வெளியிட்டு, ‘குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு இந்த போட்டோ ஷூட் செய்தேன். நான் இவ்வளவு எடை போட்டு என்னைப் பார்த் தது இல்லை. எனினும், இது கர்ப்ப காலத்தின் எடை அதிகரிப்பு மட்டுமல்ல, அனைத்துவித உடல் அசவுகரியங்களும் கூட.

எனது கை, கால்கள் வீங்கியிருந்தது. இடுப்பில் எனக்கு வலி ஏற்பட்டது. ஆனால், பிறகு என் பார்வை மாறியது. இந்தப் போட்டோக்களை நான் மிகவும் கனிவான கண்களுடன் பார்க்கிறேன். இப்போது இந்த மாற்றங்களில் நான் என் அழகை மட்டுமே பார்க்கிறேன். இந்த போட்டோக்களை எப்போதும் நான் போற் றுவேன்’ என்று ஒரு பதிவிட்டிருந்தார்.

ராதிகா ஆப்தேவின் கர்ப்ப கால போட்டோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள நெட்டிசன்கள், ‘கலாசாரம் அழிந்துவிட்டது. போட்டோ ஷூட் என்ற பெயரில், மேற்கத்திய கலாசாரங்களை இங்கு கொண்டு வருகிறார்கள்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Related Stories: