நாக சைதன்யா திருமணத்தின்போது இன்ஸ்டாவில் பரபரப்பு ஏற்படுத்திய நடிகை சமந்தா

ஐதராபாத்: நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வந்த நாக சைதன்யா அவரை நேற்று திருமணம் செய்தார். முகூர்த்தத்தின்படி நேற்று இரவு 8.15 மணிக்கு ஐதராபாத்தில் அவர்களின் திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணத்துக்கு 4 மணி நேரத்துக்கு முன்பு, நடிகையும் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியுமான சமந்தா ஒரு வீடியோ பதிவினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோவில், ஒரு பெண் மற்றும் ஆண் இருவரும் wrestling சண்டை போடுகிறார்கள். ஆரம்பத்தில் கைகொடுக்கும்போதே பெண்ணை காயப்படுத்திய அந்த வாலிபன், அதன் பிறகு சிறப்பாகவும் wrestling செய்கிறான். ஆனால் இறுதியில் பெண் தான் ஜெயிக்கிறார். அந்த பையன் கதறி கதறி அழுகிறான். அந்த வீடியோவை பதிவிட்டு ‘Fight Like A Girl’ (பெண்ணை போல் சண்டை போட வேண்டும்) என சமந்தா குறிப்பிட்டு இருக்கிறார். நாக சைதன்யா – சோபிதா திருமணத்தின்போது சமந்தா இப்படியான பதிவினை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

Related Stories: