கார்த்திகை தீபமன்று எந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் என்ன பலன் ?

கார்த்திகை தீபமன்று மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வீட்டில் உள்ள இருளையும் தங்கள் உள்ளத்தில் உள்ள இருளையும் இறைவன் அருளால் நீங்கச்செய்வது வழக்கம். பொதுவாக ஒவ்வொரு எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் ஒவ்வொரு பலன்களை பெறலாம். அந்த வகையில் எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

நல்லெண்ணை: தூய்மையான நல்லெண்ணை தீபம் இறைவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதை கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் வீட்டில் உள்ள பீடைகள் அனைத்தும் ஒழியும். அதோடு நவகிரகங்களையும் இதன் மூலம் திருப்தி படுத்தலாம்.

 விளக்கெண்ணை: விளக்கெண்ணை கொண்டு தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு புகழ் வந்து சேரும்.

நெய்: நெய் தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்கும். அதோடு நவகிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

வேப்ப எண்ணெய்: வேப்ப எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவதன் மூலம் கணவன் மனைவி இருவருக்குள் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் விலகி உறவு மேம்படும்.

மூன்று எண்ணெய் கலவை: வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தீபம் ஏற்றுவதன் பலனாக வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.

Related Stories: