தனுஷ் வழக்கு: நயன்தாரா பதிலளிக்க உத்தரவு

சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு ஜன.8ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரௌடி தான்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இடம்பெற்ற சில காட்சிகளைப் பயன்படுத்தியது தொடர்பாக தனுஷுக்கும், நயன்தாராவுக்கும் இடையே சட்டரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்பட்டது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நயன்தாராவின் வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபைரி டேல்’ என்ற ஆவணப்படத்தில், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘நானும் ரௌடி தான்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இடம்பெற்ற காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக தனுஷ் இழப்பீடு கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; வழக்கு தொடர்பாக ஜன. 8ம் தேதிக்குள் பதிலளிக்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: