சென்னை: இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்தியன் விருதுகள் நிகழ்ச்சியின் 3வது சீசன், வரும் டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில், சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் அரங்கில் நடக்கிறது. திரைத்துறையில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் உள்பட 60 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும் அரசியல், தொழில், விளையாட்டு, மருத்துவம், கல்வி, ராணுவம், காவல் ஆகிய துறைகளிலுள்ள 30 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. மறைந்த விஜயகாந்த் நினைவாக, ‘கேப்டன் விஜயகாந்த்’ என்ற பெயரில், திரைத்துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், அழகிப் போட்டியும் நடத்தப்படுகிறது. இதுபற்றி பேசிய ஜான் அமலன், திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். இதற்காக அவர், ’லயோனா அன்ட் லியோ பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் அறிமுக விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவரும், நடிகருமான ஆர்.வி.உதயகுமார், சவுந்தரராஜா, கோமல் சர்மா, ஷாலு ஷம்மு கலந்துகொண்டனர்.