கோவா திரைப்பட விழாவில் இ.வி.கணேஷ் பாபுவின் ‘ஆசான்’ குறும்படம் தேர்வு

சென்னை: இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான இ.வி.கணேஷ் பாபு, திரைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்கள், ஆவணப்படங்களை எழுதி இயக்கி வருகிறார். மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் ஜி.வனிதா தயாரிக்க, இ.வி.கணேஷ் பாபு எழுதி இயக்கி நடித்துள்ள ‘ஆசான்’ என்ற குறும்படம், கோவா 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இ.வி.கணேஷ் பாபு இயக்கியிருந்த ‘கருவறை’ என்ற குறும்படத்துக்காக தேசிய விருது பெற்ற காந்த் தேவா, ‘ஆசான்’ என்ற குறும்படத்துக்கும் இசை அமைத்துள்ளார்.

என்.கே.ராஜராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆசிரியராக இ.வி.கணேஷ் பாபு, மாணவராக ராமன் அப்துல்லா மற்றும் தஞ்சை அமலன்,  நடித்துள்ளனர். படம் குறித்து இ.வி.கணேஷ் பாபு கூறுகையில், ‘எனது ‘ஆசான்’ என்ற குறும்படம், வரும் 23ம் தேதி பகல் 12.15 மணிக்கு கோவா ஐநாக்ஸ் தியேட்டரில் திரையிடப்படுகிறது. தங்கள் சிறுவயதில் மாணவர்கள் செய்யும் குற்றங்களுக்காக அவர்களை தண்டிப்பதை விட, அந்த தவறை உணரச் செய்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கையை ஆசிரியர்களால் உயர்த்த முடியும் என்ற கருவை மையப்படுத்தி ‘ஆசான்’ குறும்படம் உருவாக்கப் பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: