இந்த வாரம் என்ன விசேஷம்?

செப்டம்பர் 14, சனி - பௌர்ணமி. மஹாளயபட்சம் ஆரம்பம். குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

செப்டம்பர் 15, ஞாயிறு - பிரதமை. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருத்தேர். திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம்

எழுந்தருளல்.

செப்டம்பர் 16, திங்கள் - துவிதியை. தேவகோட்டை ஸ்ரீரெங்க நாதர் புறப்பாடு.

செப்டம்பர் 17, செவ்வாய் - திருதியை. ஸ்ரீரங்கம் பவித்ர உற்சவ சாற்றுமறை. ஷடசீத புண்ணிய காலம். சங்கடஹர சதுர்த்தி. குரங்கணி  முத்துமாலையம்மன் பவனி.

செப்டம்பர் 18, புதன் - சதுர்த்தி. மஹாபரணி, திருவல்லிக்கேணி பார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் நரசிம்ம மூலவருக்குத்

திருமஞ்சன சேவை.

செப்டம்பர் 19, வியாழன் - பஞ்சமி. கிருத்திகை விரதம், வேளூர் கிருத்திகை, தருமை ஷண்முகர் அபிஷேகம். வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் பாலமுருகன் தங்க ரதக் காட்சி.

செப்டம்பர் 20, வெள்ளி - சஷ்டி. திருநாளைப்போவார். மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

Related Stories: