ஆடி மாத நட்சத்திர பலன்கள்

அசுவினி: குடும்ப நலனில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய மாதமிது. அரசியல் செல்வாக்கு கூடும். தனவரவு சீராகும். குருவை வழிபடவும்.

Advertising
Advertising

பரணி:  எதையும் யோசித்து செயல்பட வேண்டிய மாதமிது. பயணங்கள் பயன் தரும் மகளிர் நலன் கூடும். பகவதி அம்மனை வழிபடவும்.

கார்த்திகை: பயணங்களால் பயன் கூடும் மாதமிது. வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் அமையலாம். காதல் வசப்படும்.

ரோகிணி:  தனவரவு கூடும். நட்பு நன்மை தரும். பயணங்கள் பயன் கூட்டும். யோக நரசிம்மரை வழிபட்டு வரவும்.

மிருகசீரிஷம்: அரசு வழி உதவிகள் அமையும் மாதமிது. ஆன்மீகப் பணிகள் சிறக்கும். உற்றார், உறவினர் வருகை நன்மை தரும். வன்னிமரத்து விநாயகரை வழிபடவும்.

திருவாதிரை: மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும் மாதமிது. யாருக்கும் யோசனை சொல்ல வேண்டாம். ஜாமீனும் ஏற்க வேண்டாம். காமாட்சி அம்மனை வழிபடவும்.

புணர்பூசம்: எதையும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமிது. எதிலும் அவசரம் குறைக்கவும். உடல் நலன் சீராகும். வனதுர்க்கையை வழிபடவும்.

பூசம்: தொழில் முன்னேற்றம் கூடும் நேரமிது. கிழக்கில் லாபம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ராகு காலத்தில் கால பைரவரை வழிபடவும்.

ஆயில்யம்: பொருளாதார முன்னேற்றம் கூடும் நேரமிது. புதிய தொழில் அனுபவம் பெறலாம். மின்சார நெருப்பில் கவனம் தேவை. மதுரை மடப்புரம் விலக்கு தெற்குமுக விசாலாட்சி விநாயகரை வழிபடவும்.

மகம்: புதிய ஆடை அணிகலன் வாங்கலாம். தொழில் போட்டி கூடலாம். பெற்றோர் உடல் நலம் பேணவும். பரம சிவனை வழிபடவும்.

பூரம்: புதிய சொத்துக்கள் வாங்கும் நேரமிது. அலுவலகப் பணியில் அனுபவம் கூடும். கடன் தொல்லை சீராக குறையும். காமாட்சி அம்மனை வழிபடவும்.

உத்திரம்: தாய்வழி உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும் மறைமுக எதிர்ப்புகள் குறையும். குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.

அஸ்தம்:  செல்போன் பேச்சுகளால் சிக்கல் உண்டாகலாம். யாருக்கும் ஜாமீன் ஏற்க வேண்டாம். குருவை வழிபடவும்.

சித்திரை: அரசு வழி அனுகூலம் பெறலாம். தனியார் துறையினர் முன்னேற்றம் கூடும். காதல் வாய்ப்பு பிரச்சினை தீரும். பாம்பன் சுவாமிகளை வழிபடவும்.

சுவாதி: புதிய வண்டி, வாகன யோகம் கூடும் நேரமிது. தூரதேசத் தகவல்கள் சாதகமாகும். வழக்குகள் தாமதமாகும். வனதுர்க்கை அம்மனை வழிபடவும்.

விசாகம்: இடமாற்றம், பதவிமாற்றம் எதிர்பார்க்கலாம். ஆன்மீகப் பணியில் நாட்டம் கூடும். அனுமனை வழிபடவும்.

அனுஷம்: உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் ஏற்க வேண்டாம். நட்பு வலை விரியும். மாரி அம்மனை வழிபடவும்.

கேட்டை: மனதில் கவலைகள் குறைந்து உற்சாகம் கூடும். அரசியல் அனுபவம் கூடும். பணவரவும் கூடும். குருவை வழிபடவும்.

மூலம்: தெய்வ அனுகூலம் கூடும் நேரமிது. செல்வாக்கு கூடும். மதுரை மடப்புரம் விலக்கு தெற்கு முக விசாலாட்சி விநாயகரை வழிபடவும்.

பூராடம்: மனக்குழப்பம் கூடும் நேரமிது. எனவே எதிலும் கவனம் தேவை. சுபச் செலவுகள் கூடும். சிவனை வில்வம் மலர் சாற்றி வழிபடவும்.

உத்திராடம்: குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் மாதமிது. கடன்சுமை சீராகக் குறையும். அரசுவழி அனுகூலம் பெறலாம். பெருமாளை வழிபடவும்.

திருவோணம்:  அலுவலகப் பணிகள் அலைச்சல் கூட்டும். குடும்ப உறவுகள் சீராகும். மனநிம்மதி கூடும். மதுரை மடப்புடம் விலக்கு தெற்கு முக

விசாலாட்சி விநாயகரை 108 முறை வலம் வரவும்.

அவிட்டம்: மறைமுக எதிர்ப்புகள் மறையும் மாதமிது. தகவல்கள் தனவரவு கூட்டும். பெண்களால் யோகம் உண்டாகும். சிவசக்தியை வழிபடவும்.

சதயம்: புதிய தொழில் வாய்ப்புகள் கைகூடும் நேரமிது. காதல் சந்திப்புகளில் கவனம் தேவை. வரவுகள் சீராகும். மதுரை-மடப்புரம் விலக்கு திசை மாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகருக்கு 7 தேங்காய் மாலை சாற்றி 108 முறை வலம் வரவும்.

பூரட்டாதி: புதிய தகவல்களால் பொருளாதார வளம் கூடும் மாதமிது. புண்ணிய தீர்த்த யாத்திரை வாய்ப்புகள் அமையும். குடும்ப நலன் கூடும். அனுமனை வழிபடவும்.

உத்திரட்டாதி: உடல் நலத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. கடன் சுமை குறையும். வணிக வளம் கூடும். அலுவலகப் பணி சிறக்கும். பாம்பன் சுவாமிகளை வழிபடவும்.

ரேவதி: கலைத்துறையினர் முன்னேற்றம் கூடும் மாதமிது. எழுத்து, பேச்சு ஏற்றம் தரும். ஆன்மீக சிந்தனை கூடும். திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.கனவு ரகசியம்: பறப்பது போல கனவு கண்டால் வீண்பழி வரலாம்.

திருப்புவனம் - மடப்புரம் விலக்கு ஜோதிடர்

கரு.கருப்பையா, M.A.M.Phil.,B.Ed.,

போன்: 94431-65504

www.karukaruppiah.com

Related Stories: