மம்மூட்டிக்கு சக போட்டியாளர் என்றாலும் மோகன்லாலுக்கு எனது வளர்ச்சியில் அக்கறை: துல்கர் சல்மான்

சென்னை: தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்‌ஷனில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி நடித்துள்ள பான் இந்தியா படம், ‘லக்கி பாஸ்கர்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 31ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. அப்போது துல்கர் சல்மான் பேசியதாவது: 1980களின் பிற்பகுதி முதல் 1990களின் முற்பகுதி வரையிலான, ஒரு வங்கி காசாளரின் அசாதாரண வாழ்க்கையை விவரிக்கிறது.

6 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நான், என் மனைவி மீனாட்சி சவுத்ரி, மகன் ரித்விக்குடன் அமைதியாக வாழ்ந்து வரும் நேரத்தில் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனது சின்ன வயதிலிருந்தே மோகன்லால் சாரை எனக்கு தெரியும். எனது தந்தையும், அவரும் மலையாள திரையுலகில் சக போட்டியாளர்கள் என்றாலும், நிஜத்தில் அவர்களைப்போல் நெருங்கிய நண்பர்கள் யாரும் இருக்க முடியாது.

ஒருவர் மீது ஒருவருக்கு அதிக அன்பும், அக்கறையும் இருக்கிறது. அதுபோல், மோகன்லால் சார் என்னை மிகவும் அன்புடன் பார்த்துக்கொள்வார். எனது சினிமா கேரியரைப் பற்றி அக்கறையுடன் விசாரிப்பார்.

 

Related Stories: