சகோதர உறவு நிலைபெற அருள்வார் சுக்ரீஸ்வரர்

சர்க்கார் பெரியபாளையம், திருப்பூர்

சுக்ரீவனை, மதங்க மாமுனி, அவன் பிரிவுத் துயர் தீர, வாலியைப் பின்தொடர்ந்து கொங்கு நாட்டிற்குச் சென்று, அங்கு கிளிகள் கூட்டம், கூட்டமாக விரும்பி வாழும், கடம்ப வனத்தில், சிவலிங்கத்தை பிரதிஷ்டைச் செய்வித்து அண்ணனின் உறவு வேண்டி வரம் கேட்டு வழிபாடு இயற்றுமாறு கூறி வழியனுப்பி வைக்கப்பட்டான்.கொங்கு நாட்டில், சுக்ரீவன், கொங்கு நாட்டில், கடம்ப மலர்கள் பூத்துக் குலுங்கும் அடர்ந்த கடம்ப வனத்தை வந்தடைந்தான். இத்தலம், திருப்பூர் மாவட்டம், சர்க்கார் பெரியபாளையம் என்னும் ஊராகும். கடம்ப வனம், சர்க்கார் பெரியபாளையம் என்ற ஊராகிய பொழுதும், மாலை நேரத்தில் சுமார் 500க்கு மேற்பட்ட கிளிகள் கோபுரத்திற்குள் அண்டி வாழ்கின்றன.

பெருந்துறைக்கு தென்மேற்கில் 28கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஆலயத்தை சுக்ரீஸ்வரர் திருக்கோயில், தென் குரக்குத் தளி நாதர் திருக்கோயில், மிளகு ஈஸ்வரர் திருக்கோயில் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. குறும்பர் நாட்டில், நொய்யல் ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது. குரங்கு வழிபட்ட தலம் ஆகையால், சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்தை ‘‘கொங்கிற் குறும்பில் குரக்குத் தளியாய்’’ என ஊர்த் தொகையில் பாடியுள்ளார். மூலவர் சந்நதிக்கு எதிரே பத்ரகாளி சந்நதி எழுப்பப் பெற்றுள்ளது வித்தியாசமாக உள்ளது. மூலவர் சந்நதி பூமியிலிருந்து நான்கடி உயரத்தில் அமைக்கப் பெற்றுள்ளது.

சுக்ரீவன், தன் அண்ணன் மேல் கொண்டிருந்த பாசத்தால், அவன் பின்னாலேயே வந்தவன், அவனது அன்பு வேண்டு வழிவிட்டு வரம் பெற இத்தலத்து சிவலிங்கரை பிரதிஷ்டைச் செய்வித்து திருக்கோயில் எழுப்பி ஓராண்டு மட்டும் வழிபட்டுள்ளான். ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். திருச்சுற்றில் சுக்ரீஸ்வரரை, சுக்ரீவன் குத்திட்டு அமர்ந்த நிலையில் வழிபடும் கோலமும், கருவறையின் முன்புற திருசுவற்றில் நின்றபடி வழிபடும் காட்சியும், தலவரலாற்றினை ஒரு சொல் கூட செலவில்லாமல் சொல்லிவிடும் அரைப் புடைப்புச் சிற்பங்களாக அமைகின்றன.

சுக்ரீஸ்வரர் திருமுன், எங்குமே இதுவரை தரிசித்து இல்லாத அதிசயமாக இரு நந்திகள் முன்னும் பின்னுமாக உள்ளன. இதற்கு காரணம் இத்தலத்து நந்தியம் பெருமாள், இரவு நேரங்களில், உயிர் பெற்று காளையாக மாறி விவசாயம் செழிக்க, வயல்வெளிகளில் வலம் வருவதுண்டு. ஒரு நாள் ஒரு விவசாயி, தன் நிலத்திலிருந்த காளையைப் பிடித்து கோபத்தால், அதன் ஒரு கொம்பினை உடைத்தும், ஒரு காதினை அறுத்தும் விட்டான். காலையில் கோயிலுக்குச் சென்றவர்கள், நந்தி கொம்பு உடைந்தும், காது அறுந்து ரத்தம் வழிவதும் கண்டு பதறிப் போயினர்.

விவசாயி, தன்னை மன்னித்து அருளுமாறு இறைவனை வேண்டிக் கொண்டதுடன் தான் இழைத்த தெய்வக் குற்றத்திற்குப் பிராயச்சித்தமாக அதே அளவில் புதிய நந்தியை மூலவர்க்கு முன்னால் பிரதிஷ்டை செய்தான். மறுநாள், கோயிலுக்குள் நுழைந்தவர்கள், பழைய நந்தி தனது பழைய இடத்திலும், புதிய நந்தி. பின்னாலும் இருக்கக் கண்டு அதிசயத்துப் போயினர். பிரதோஷம், பூஜை ஒன்றுக்கு இரண்டாக இரு நந்திகளுக்கு நடக்கும் ஒரே அதிசயக் கோயிலாகவும் அமைகின்றது.

கொங்கு நாட்டின் செல்வ வளமான கால் நடைச் செல்வங்களைத் தோற்றுவித்த நந்தி, இவ்விரு கோயிலும் தனிப்படப் பேசப்படுகின்றனர். சுக்ரீஸ்வரர் திருக்கோயிலில் பஞ்ச லிங்கமும் பிரதிஷ்டையாகி இருக்க, மூலவரே அக்னி லிங்கராக எழுந்தருளியுள்ளார். இத்தல ஈசனை வழிபட்டு வந்தால் அண்ணன் தம்பி உறவுகள் பலப்படும். என்று சொல்லப்படுகிறது. இக்கோயில் அமைந்துள்ள சர்க்கார் பெரியபாளையம், திருப்பூரிலிருந்து, ஊத்துக்குளி செல்லும் பாதையில் 8.கி.மீ தூரத்தில் உள்ளது.

இறைவி

Related Stories: