3 நடிகைகளை காதலித்தேன்: இயக்குனர் பாலா தகவல்

சென்னை: இதுவரை 3 நடிகைகளை காதலித்தேன் என இயக்குனர் பாலா கூறினார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சிவக்குமாருக்கும், பாலாவுக்கு கேள்வி பதில் செஷன் வைக்கப்பட்டது. அப்போது பாலாவிடம் சிவக்குமார், ‘சேது என்ற காதல் படத்தை இயக்கி இயக்குனராக கவனம் பெற்ற நீங்கள் சினிமாவில் எந்த ஹீரோயினையாவது காதலித்திருக்கிறீர்களா?.. உங்களை யாரேனும் காதலித்திருக்கிறார்களா?’ என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த பாலா, ‘இரண்டு, மூன்று இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இப்போது திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள். அதன் காரணமாக பெயர் சொல்ல விரும்பவில்லை’ என்று ஓபனாக சொல்லிவிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பாலா எந்த ஹீரோயினை காதலித்திருப்பார் என்று ஆராய்ச்சியில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள். கருத்து வேறுபாடால் தனது மனைவியை பிரிந்துவிட்ட பாலா, தற்போது சிங்கிளாக இருக்கிறார்.

Related Stories: