அதில் பேசிய கவின், ‘இந்த படத்தில் நான் கதையையே கேட்கவில்லை. படத்தின் ஷூட்டிங் உள்ளிட்ட தகவல்களை மட்டுமே கேட்டேன். அந்த அளவிற்கு இயக்குனர் மீது நம்பிக்கை இருந்தது. நெல்சன் திலீப்குமார், சிவபாலன் முத்துக்குமார் உள்ளிட்டவர்களுக்கு இது முதல் முயற்சி என்பதால் இந்த படத்தை மேலும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதில் தான் தீவிரமாக செயல்பட்டேன். இந்தப் படத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் உள்ளிட்டவற்றின் மூலம் படம் குறித்த ஒரு நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது’ என்றார்.