வடகடம்பாடி ஊராட்சியில் அரசு பள்ளியை சுற்றி கொட்டிய குப்பைகள் அகற்றம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே வடகடம்பாடி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் தரம் பிரிக்கப்படாமல், நல்லான் பிள்ளைபெற்றாள் இருளர் குடியிருப்பை ஒட்டியுள்ள ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தை சுற்றிலும் கொட்டப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதுடன், மாணவர்கள் உள்பட பலருக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை நீடித்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் முரசு நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று வடகடம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பரசுராமன் தலைமையில், குப்பை கழிவுகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் 100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டன. பின்னர் அந்த இடங்களில் பிளிச்சிங் பவுடர், கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன. இதற்காக அக்கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்….

The post வடகடம்பாடி ஊராட்சியில் அரசு பள்ளியை சுற்றி கொட்டிய குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: