ஐதராபாத்: திரைக்கு வந்த ‘கல்கி 2898 ஏடி’ என்ற படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் ‘ராஜா சாப்’ என்ற படத்தை மாருதி இயக்கு கிறார். இதையடுத்து ஹனுராகவபுடி இயக்கத்தில் ஒரு படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். பிறகு ‘அர்ஜூன் ரெட்டி’, ‘அனிமல்’ ஆகிய படங்களின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இம்மூன்று படங்களும் பான் இந்தியா படங்களாகவே உருவாக்கப்படுகின்றன. இதில் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தில் பிரபாஸுக்கு எதிரான வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரங்களில் பாலிவுட் நட்சத்திர தம்பதி சைஃப் அலிகான், கரீனா கபூர் இணைந்து நடிக்கின்றனர்.
இதுபற்றி வெளியான தகவலை இயக்குனர் தரப்பு உறுதி செய்யவில்லை. இது உறுதி செய்யப்பட்டால், ஹீரோவுக்கு இப்படியொரு பிரபலமான நட்சத்திர தம்பதி இணைந்து வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிப்பது இதுவே முதல்முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் நேற்று திரைக்கு வந்திருக்கும் ‘தேவரா’ என்ற படத்தின் மூலம் சைஃப் அலிகான் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார்.
The post பிரபாஸ் படத்தில் வில்லன், வில்லியாக பாலிவுட் நட்சத்திர தம்பதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.