2 முறை காதலில் தோல்வி: தமன்னா ஓப்பன் டாக்

மும்பை: தென்னிந்திய மொழிகளை தொடர்ந்து பாலிவுட்டிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, திரைப்படங்களை விட வெப்தொடர்களில் படுகவர்ச்சியாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். தற்போது அவரும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் தீவிரமாக காதலிக்கின்றனர். ஆரம்பத்தில் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். தற்போது அவர்கள் வெளிப்படையாகப் பேசுகின்றனர். இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் ரிலேஷன்ஷிப் பற்றிய விஷயங்களை தமன்னா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அது வருமாறு: உங்கள் பார்ட்னரின் குணாதிசயங்களை எந்தவிதத்திலும் மாற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அவரை மாற்ற வேண்டும் என்பது, அவர்களை நீங்கள் கட்டுப்படுத்தி வைப்பது போன்றது. அதுபோல், ரிலேஷன்ஷிப்பில் பொய் சொல்வது கண்டிப்பாக இருக்கக்கூடாது. சிறிய பொய்யும் சொல்லக்கூடாது. நீங்கள் காதலிக்கும் பெண் சொல்வதைக் கேளுங்கள். அவர்களுக்குப் பிரச்னை என்றால் காது கொடுத்துக்கேளுங்கள். எல்லா நேரங்களிலும் அவர்கள் உங்களிடம் தீர்வு தேடி வருவது இல்லை. அவர்கள் சொல்வதைக் கேட்க ஒரு நபர் தேவை.

அதைப் புரிந்துகொண்டு, அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். சிறுவயதில் எனக்கு ஒரு காதல் தோல்வி இருந்தது. அந்த நபருக்காக எல்லாவற்றையும் நான் விட்டுவிட வேண்டுமா என்று தீவிரமாக யோசித்தேன். வாழ்க்கையில் இன்னும் பல விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தேன். தவிர, வேறொரு நபருடன் இரண்டாவது முறையாக காதலில் தோல்வி அடைந்தேன். அந்த ஹார்ட் பிரேக்கை பொறுத்தவரையில், அந்த நபர் என் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதையும் செய்யவில்லை. அதனால், அந்த நபரின் காதலையும் நான் கைவிட்டுவிட்டேன்.

The post 2 முறை காதலில் தோல்வி: தமன்னா ஓப்பன் டாக் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: