கங்குவா ஒரு குழந்தை சூப்பர் ஸ்டார் படம் வருவதுதான் சரி: சூர்யா பேச்சு

சென்னை: ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, கவுரி கிஷன், ஜனகராஜ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. இதையடுத்து பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம், ‘மெய்யழகன்’. கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடந்தது. அப்போது சூர்யா பேசுகையில், ‘கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’ டைட்டிலுக்கு கீழே ஜோதிகா, சூர்யா என்று எங்களின் பெயர்களைப் போட்டுக்கொள்ள வாய்ப்பளித்த பிரேம் குமாருக்கு மிகவும் நன்றி.

படத்தைப் பார்த்தவுடன் கார்த்தியைக் கட்டிப்பிடித்தேன். இப்படத்தை வணிக ரீதியாகப் பார்க்காதீர்கள். எனது ரசிகர்களின் அன்புக்கு தலைவணங்குகிறேன். இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆயிரக்கணக்கானோர் இரவு, பகலாக உழைத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். தமிழ் சினிமாவுக்கு இது ஒரு ஸ்பெஷலான படம். எங்களின் கடுமையான உழைப்பு வீண்போகாது. அதற்கான அன்பையும், மரியாதையையும் கண்டிப்பாக ரசிகர்கள் தருவார்கள்.

ரஜினி சார் நடித்த ‘வேட்டையன்’, வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகிறது. நான் பிறக்கும்போது சினிமாவுக்கு வந்தவர், எனக்கு மூத்தவர், கடந்த 50 வருடங்களாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர். எனவே, சூப்பர் ஸ்டார் படம் வருவதே சரியாக இருக்கும். ‘கங்குவா’ ஒரு குழந்தை. அது வரும் அன்றுதான் அதற்குப் பிறந்தநாள். அன்று ஒரு பண்டிகையாக படத்தைக் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றார்.

The post கங்குவா ஒரு குழந்தை சூப்பர் ஸ்டார் படம் வருவதுதான் சரி: சூர்யா பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: