சென்னை: ஜெம்பிரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் ‘பாம்’. அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, கிச்சா ரவி, பூவையார் நடித்துள்ளனர். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ விஷால் வெங்கட் எழுதி இயக்கியுள்ளார். மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். பி.எம்.மகிழ்நன் வசனம் எழுதியுள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக், தனியார் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதுபற்றி விஷால் வெங்கட் கூறுகையில், ‘இதே கல்லூரியில் நானும் சுற்றிக் கொண்டிருந்தேன், இப்போது இங்கு பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது குறித்து மகிழ்ச்சி. இது சுவாரஸ்யமான படமாக இருக்கும்’ என்றார். ஷிவாத்மிகா ராஜசேகர் கூறும்போது, ‘நான் இமானின் தீவிரமான ரசிகை. இப்படத்துக்கு அற்புதமான பாடல்களை வழங்கியுள்ளார்’ என்றார். அர்ஜூன் தாஸ் கூறுகையில், ‘எனக்கு ரொம்ப ஸ்பெஷல் படமான இதில், கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சிபாரிசு செய்த இமானுக்கு நன்றி’ என்றார்.
The post அர்ஜூன் தாஸ் ஷிவாத்மிகா நடிக்கும் பாம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.