இஸ்கான் கோயிலில் திருமஞ்சன சேவை

கோவை: கோவையில் இஸ்கான் ஜெகன்நாதர் கோயிலில் நேற்று திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. கோவையிலுள்ள ஹரே கிருஷ்ணா அமைப்பை சார்ந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கோவை கொடிசியா அருகேயுள்ள இஸ்கான் ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு  நேற்று காலை பகவான் ஜெகன்நாதர், பல தேவர் மற்றும் சுபத்ரா தேவியருக்கு திருமஞ்சன சேவை நடந்தது.

விக்கிரகங்களுக்கு திருமஞ்சன அபிஷேகம் செய்யப்பட்டது. 1008 உணவு பதார்த்தங்கள் பகவானுக்கு படைக்கப்பட்டது. சிறப்பு ஆராதனை நடந்தது. தவத்திரு பக்தி வினோத சுவாமியின் சிறப்பு சொற்பொழிவும், பிரசாத விருந்தும் நடந்தது.

Related Stories: