பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மினிவேனில் குட்கா கடத்திய 2 பேர் கைது: வேலூர் அருகே நள்ளிரவில் சிக்கினர்

பள்ளிகொண்டா: தமிழ்நாட்டில் ‘‘ஆபரேஷன் கஞ்சா 2.0’’ என்ற பெயரில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பள்ளிகொண்டா டோல்கேட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12.30 மணியளவில் பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி வந்த மினிவேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில், டிரைவர் உட்பட 2 பேரும் ஒருவருக்கொருவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் மினிவேனை சோதனை செய்ததில் பிளாஸ்டிக் பைகளின் உள்ளே அட்டை பெட்டிகள் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது குட்கா, பான்மசாலா பொருட்கள் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து விசாரணைக்காக வண்டியுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.டிரைவரிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் இல்லை எனவும், சாதாரண பாக்கு தான். இதனை தடை செய்யவில்லை எனவும் தெரிவித்தார். அதற்கேற்ப புதுவிதமாக நீலநிற பாக்கெட்டுகளில் பான்மசாலா பொருட்கள் அடைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் போதைப்பொருள் கண்டறிதல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சோதனை செய்ததில் குட்கா, பான்மசாலா பொருட்கள் கடத்தி வந்திருப்பது உறுதியானது. இதையடுத்து, வேனில் இருந்த மொத்த பார்சல்களையும் போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்கா, பான்மசாலா பொருட்கள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த பள்ளிகொண்டா போலீசார், பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ்(31), ரமேஷ்(23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பறிமுதலான குட்கா, பான் மசாலா போதைபொருட்களின் மதிப்பு ரூ.12 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்….

The post பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மினிவேனில் குட்கா கடத்திய 2 பேர் கைது: வேலூர் அருகே நள்ளிரவில் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: