திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல முயற்சி போலி பாஸ்போர்ட்டுடன் மேலும் 8 பேர் சிக்கினர்

திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற மேலும் 8 பேரை திருச்சி போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பனைகுளத்தை சேர்ந்தவர் அரபிமுகமது(53). இவர் ஷார்ஜா செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். பாஸ்போர்ட்டை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனையிட்டபோது, பிறந்த தேதி, முகவரி போலி என தெரியவந்தது. இதையடுத்து, அவரை ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை போஸ்(53), கடந்த 16ம் தேதி விமானத்தில் மலேசியாவிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தார்.

அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில் போலியான பிறந்த தேதி, முகவரியில் வெளிநாடு சென்றது தெரியவரவே போலீசார் கைது செய்தனர். மேலும், போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற நவல்பட்டு பர்மா காலனி அண்ணாமலை நகரை சேர்ந்த மாரியப்பன்(48), ராமநாதபுரம் சுதன்கோட்டையை சேர்ந்த அப்துல் ரஹீம்(52), புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆரோக்கியசாமி(43), ராமநாதபுரம் மாவட்டம் அழகன் குளம் ருத்ரபசுபதி(60), திருச்சி ஹீபர் ரோடு சாகுல்ஹமீது(55), புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி முகமது ராவுத்தர்(54) ஆகியோரும் போலி பாஸ்போர்ட்டுடன் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பறக்க முயன்ற 4 பேர் கைதானது குறிப்பிடத்தக்கது.

The post திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல முயற்சி போலி பாஸ்போர்ட்டுடன் மேலும் 8 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: