ஹாலிவுட் நடிகரை காதலிக்கும் எமி ஜாக்சன் திடீர் விருந்து

சென்னை: பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர், எமி ஜாக்சன். தமிழில் கடைசியாக அருண் விஜய்யுடன் இணைந்து ‘மிஷன் சாஃப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்பு வெளிநாட்டு தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவைக் காதலித்த அவர், கடந்த 2019ல் அவரை திருமணம் செய்ய நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தினார். ஆனால், ஏனோ அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில் ஒரு ஆண் குழந்தைக்குத் தாயான எமி ஜாக்சன், திடீர் கருத்து வேறுபாடு காரணமாக ஜார்ஜ் பனயிட்டோவிடம் சண்டை போட்டுவிட்டு பிரிந்து சென்றார். மகன் ஆண்ட்ரியாஸை தன்னுடன் வைத்துக்கொண்ட அவர், மீண்டும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலிக்கும் எமி ஜாக்சன் இதுபற்றி கூறும்போது, ‘நாங்கள் இருவரும் நல்ல புரிதலுடன் இருக்கிறோம்.

எட் வெஸ்ட்விக் என் உணர்வுகளுடன் கலந்துவிட்டார். இருவரும் விரைவில் திருமணம் செய்வோம்’ என்றார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் சுவிட்சர் லாந்தில் இருவரும் தங்களுடைய காதலின் அடையாளமாக மோதிரம் மாற்றிக்கொண்டனர். இதையடுத்து எமி ஜாக்சன், எட் வெஸ்ட்விக் காதல் ஜோடியின் நிச்சயதார்த்த விழாவின் முன்னோட்டமாக இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

The post ஹாலிவுட் நடிகரை காதலிக்கும் எமி ஜாக்சன் திடீர் விருந்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: