அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

அணைக்கட்டு: அணைக்கட்டு தாலுகா கீழ்கொத்தூர் கிராமத்தில் அரசமரத்தடி ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த பழமையான கோயிலை புதுப்பிக்கும்  பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி, நேற்று கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மஹாகணபதி ஓமம், வாஸ்து சாந்தி, நவகிரக பூஜை, மிருத்சங்கிரகணம், நாடிசந்தானம், முதல்கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 10 மணியளவில் விநாயகர் கோயில் கோபுரத்தில் மீது புனித நீர் ஊற்றப்பட்டு  கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. கீழ்கொத்தூர் மற்றும்  சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: