மடாமி வெப்: விமர்சனம்

மார்வெல் காமிக்ஸின் முக்கிய சூப்பர் ஹீரோவான ‘ஸ்பைடர் மேன்’ கதையின் தொடர்ச்சி இது. முக்கியமான மாற்றம் என்னவென்றால், இதில் ஸ்பைடர் மேன் வில்லன். படத்தின் நாயகி மடாமி வெப்பின் (டெக்கோட்டா ஜான்சன்) தாய், சிலந்திகள் குறித்து தீவிர ஆராய்ச்சி செய்து வருபவர். ஒருமுறை அவர் அதிக சக்தி வாய்ந்த அபூர்வ சிலந்தி ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவருடன் பணியாற்றும் எசாக்கில் சிம் (தாகர் ரஹிம்), அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனைவரையும் கொன்று குவித்துவிட்டு, அபூர்வ சிலந்தியுடன் தப்பித்துச் சென்றுவிடுகிறார். அப்போது கர்ப்பிணியான மடாமியின் தாயாரையும் சுட்டு விடுகிறார். அவரைக் காப்பாற்ற ஸ்பைடர் உலகம் முயற்சிக்கிறது. ஆனால், அவர்களால் குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிகிறது.

பிறகு நன்கு வளர்ந்த அக்குழந்தை, விபத்து மீட்புப்படை வீராங்கனை மடாமி ஆகிறது. ஒருகட்டத்தில், நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தனக்கு இருப்பதை அவர் அறிகிறார். வில்லன் எசாக்கில் சிம் ஸ்படைர் மேன் சக்தியைப் பெற்று, சூப்பர் வில்லனாக மாறுகிறார். தனக்கு 3 சிறுமிகளால் பிற்காலத்தில் ஆபத்து என்பதைக் கண்டுபிடிக்கும் அவர், உடனே அவர்களை அழிக்க திட்டமிடுகிறார். இதை தனது சூப்பர் பவரால் கண்டுபிடிக்கும் மடாமி, அவர்களைக் காப்பாற்ற கடுமையாகப் போராடுகிறார். அந்தப் போராட்டம்தான் படம்.

சற்று குழப்பமான கதை என்றாலும், புதிய கோணத்தில் அமைக்கப்பட்ட கதையாக இருக்கிறது. வழக்கமான ஸ்பைடர் மேன் கதையை எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றம்தான் கிடைக்கும். அதிரடி ஆக்‌ஷனை விட, கதைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. கடைசி 15 நிமிடங்களில், ஸ்பைடர் மேன் படம் பார்த்த திருப்தி கிடைக்கிறது. அடுத்த பாகத்தில், மடாமி காப்பாற்றும் இளம் பெண்கள் அதிரடி ஆக்‌ஷனில் ஈடுபடுவார்கள் என்று லீட் கொடுத்துள்ளார், இப்படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.கிளார்க்சன்.

The post மடாமி வெப்: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: