மனித குலத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்: மன்சூர் அலிகானுக்கு திரிஷா கடும் கண்டனம்

சென்னை: தன்னைப் பற்றி தாறுமாறாகப் பேசிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று வெளியான அவரது டிவிட்டர் பதிவு, திரையுலக வட்டாரத்தில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ேலாகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்த ‘லியோ’ படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இதில் மன்சூர் அலிகானும் நடித்திருந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் அளித்த ஒரு பேட்டியில், ‘நான் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவிலேயே இந்த விஷயத்தை சொல்லி இருப்பேன். ஆனால், கலவரம் பண்ண சிலபேர் இருக்கிறார்கள் என்பதால் சும்மா இருந்துவிட்டேன். இந்த படத்தில் திரிஷாவுடன் நடிக்கிறோம். பெட்ரூம் சீன் இருக்கும். குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி திரிஷாவையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன்’ என்று மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.

இதையடுத்து அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று திரிஷா தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சமீபத்தில் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி கேவல மாகவும். கீழ்த்தரமாக வும் பேசிய வீடியோ என் கவனத்துக்கு வந்தது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், இதில் பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு, வெறுக்கத்தக்க மற்றும் மோசமான ரசனையை காண்கிறேன். அவரைப் போன்ற பரிதாபகரமான ஒருவருடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். மேலும், எனது திரையுலக வாழ்க்கை முழுவதும் இந்த மாதிரி ஒருபோதும் நடக்காது என்பதை உறுதி செய்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்’ என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிஷாவுக்கு ஆதரவாக நெட்டிசன்களும், ரசிகர்களும் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.

The post மனித குலத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்: மன்சூர் அலிகானுக்கு திரிஷா கடும் கண்டனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: