தீரமிக்க திராவிட தலைவர் தியாகராயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: நீதிக்கட்சியின் முதன்மையான தலைவர் சர் பிட்டி தியாகராயர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: திராவிட மாடல் எனும் மக்கள் நல நிர்வாகத்திற்கு அடித்தளமிட்ட நீதிக்கட்சியின் முதன்மையான தலைவரும், சென்னை மாநகராட்சியின் தலைவராக பணியாற்றியவரும், மாநகராட்சி பள்ளியில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திக் கல்விச் சுடரை ஏற்றியவருமான ‘வெள்ளுடை வேந்தர்’ சர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாள் இன்று! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை சென்னைவாசிகள் எனக்கு வழங்கியபோது, ரிப்பன் கட்டிடத்தின் முகப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பணியை தொடங்கியதை நினைவில் கொள்கிறேன்.தீரமிக்க திராவிட தலைவர் தியாகராயர் புகழ் போற்றி, அனைவருக்கும் அனைத்தும் என்ற லட்சியத்துடன் மக்கள்நல பணியினை தொடர்கிறேன்….

The post தீரமிக்க திராவிட தலைவர் தியாகராயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: