திருப்பூர் சுப்பிரமணியம் ராஜினாமா

திருப்பூர்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் ஸ்ரீசக்தி திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இது திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு சொந்தமானது. இங்கு தீபாவளி பண்டிகையன்று அனுமதியின்றி சிறப்புக் காட்சிகள் திரையிடுவதாக கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர் சுப்பிரமணியத்திடம் விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார். அதுபோல், திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் தலைமையில் சில அதிகாரிகள் தியேட்டருக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், பெருந்தொழுவில் இருக்கும் வீட்டில் நேற்று சக்தி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நான் விலகுகிறேன். அரசு விதி, இந்தி படத்துக்கு பொருந்தாது என்று நினைத்து, காலை நேரத்தில் சிறப்புக் காட்சியை எங்கள் திரையரங்கத்தினர் ஒளிபரப்பி விட்டனர். நானும் மனிதன்தான். 100 சதவீதம் தவறில்லாமல் இருக்க முடியாது. சாதாரண விஷயத்தை இவ்வளவு பெரிதுபடுத்தி இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதனால், இந்த பதவிகளில் இருந்து நான் வெளியேறுகிறேன்.

The post திருப்பூர் சுப்பிரமணியம் ராஜினாமா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: