திரிசூலம், பொழிச்சலூர் பகுதிகளில் சாலை பணிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்ட பேரவையில் கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது:பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 15 ஊராட்சி பகுதிகள் உள்ளன. குறிப்பாக பல்லாவரம் தொகுதியில் உள்ள பொழிச்சலூர் மற்றும் திரிசூலம் ஊராட்சிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று விட்டது. ஆனால், சாலை பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. ஆகவே, சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க ஊராட்சி பகுதிகளுக்கு நிதி ஆதாரம் வழங்க வேண்டும், என்றார்.இதற்கு பதில் அளித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசுகையில், ‘மேற்கண்ட பகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, நகர்ப்புற வளர்ச்சி துறையின் சார்பிலும் வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, உறுப்பினர் குறிப்பிட்டு சொன்னால், அந்த சாலைகளை மேம்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்,’ என்றார். …

The post திரிசூலம், பொழிச்சலூர் பகுதிகளில் சாலை பணிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: