விவசாயி கேரக்டரில் இரா.முத்தரசன் நடிக்கும் அரிசி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விவசாயி கேரக்டரில் நடிக்க, இளையராஜா இசையில் உருவாகும் படம், ‘அரிசி’. இதை மோனிகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.சண்முகம் தயாரிக்கிறார். இரா.முத்தரசன் மனைவி வேடத்தில் ரஷ்யா மாயன் நடிக்கிறார். மற்றும் சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன் ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் நடிக்கின்றனர். ஜான்சன் ஒளிப்பதிவு செய்ய, மகேந்திர பிரசாத் இணைந்து தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.ஏ.விஜயகுமார் இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டுமல்ல, அது மனித வாழ்வியலின் உயிர்நாடி என்பதை இன்றைய தலைமுறைக்கு சொல்வதே இப்படத்தின் நோக்கம். விவசாயியாக நடிக்கும் இரா.முத்தரசன் பேசும் ஒவ்வொரு வசனமும் அர்த்தமுள்ளதாக இருக்கும். கும்பகோணம் பகுதியில் குடவாசல் அருகிலுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்தது. அப்பகுதி விவசாயிகளும் படத்தில் நடித்துள்ளனர்’ என்றார்.

The post விவசாயி கேரக்டரில் இரா.முத்தரசன் நடிக்கும் அரிசி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: