தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர்: தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் மரகதவு மற்றும் மர ஜன்னல்கள் தயாரிக்கும்  மரத்தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 5 பெண்கள் உட்பட 60 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் மர தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த தொழிற்சாலையில் உள்ளே இருந்த மரப் பொருட்கள் மீது தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போது ஏற்பட்ட கடும் புகையின் காரணமாக ஊழியர்கள் அங்கிருந்து வெளியே ஓடிவந்த தப்பினர். இதுகுறித்து உடனடியாக திருவள்ளூர் மற்றும் திருவூரில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகியது. இந்த தீயால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: