மாரிமுத்துவின் குரலுக்காக 100 பேருக்கு ஆடிஷன்

சென்னை: எ ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம், ‘வீராயி மக்கள்’. விஜயா வெள்ளைத்துரை, அருண்குமார், சுரேஷ் குமார், சாய் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். முக்கிய வேடங்களில் வேல.ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், ரமா, செந்தில் குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டியக்கா, நந்தனா நடித்துள்ளனர். எம்.சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார். மதுரகவி பாடல்கள் எழுத, சுசீந்திரன் உதவியாளர் நாகராஜ் கருப்பையா இயக்கியுள்ளார். இவர், ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ என்ற படத்தை இயக்கியவர்.

‘வீராயி மக்கள்’ படம் குறித்து நாகராஜ் கருப்பையா கூறுகையில், ‘ரத்த சொந்தங்களின் அன்பையும், பாசத்தையும் கிராமத்துப் பின்னணியில் மிக அழுத்தமாகச் சொல்லும் கதை இது. ஒரு சின்ன பிரச்னையால் பிரிந்த குடும்பம், 25 வருடங்களுக்குப் பிறகு எப்படி இணைகிறது என்பது கதை. தற்போது சிதைந்து வரும் கூட்டுக்குடும்ப கலாசாரத்தை மீட்டெடுக்க இப்படத்தின் மூலம் முயற்சிக்கிறோம். புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தில் நடித்து முடித்தபோது திடீரென்று மாரிமுத்து மரணம் அடைந்ததால், அவரது டப்பிங் இடம்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாரிமுத்துவின் குரல் தனித்துவம் வாய்ந்தது என்பதால், அவரைப்போலவே பேச 100 பேருக்கு மேல் ஆடிஷன் நடத்தினோம். கடைசியில் உதவி இயக்குனர் அமல்ராஜ் என்பவரை டப்பிங் பேச வைத்தோம். அவரது குரல் 100 சதவீதம் மாரிமுத்துவின் குரலுடன் பொருந்தியுள்ளது’ என்றார்.

The post மாரிமுத்துவின் குரலுக்காக 100 பேருக்கு ஆடிஷன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: