இலங்கை பிரதமருடன் பிரபுதேவா சந்திப்பு

கொழும்பு: நடனம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என்று பல்வேறு தளங்களில் இயங்கி வரும் பிரபுதேவா, தற்போது ‘முசாசி’ என்ற படத்தில் நடிக்கிறார். ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் இதில், கம்பீரமான போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா நடிக்கிறார். தவிர விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் நடிக்கின்றனர். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, லியாண்டர் லீ மார்ட்டி இசை அமைக்கிறார்.‌ ஆக்‌ஷன் என்டர்டெயினர் ஜானரில் உருவாகும் இப்படத்தை ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக பிரபுதேவா மற்றும் படக்குழுவினர் இலங்கையில் தங்கியுள்ளனர். இதையறிந்த இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன, படக்குழுவினரை கவுரவப்படுத்தும் நோக்கத்தில் சிறப்பு அழைத்து விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட படக்குழுவினர், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் விரைவில் முடியும் நிலையில் இருக்கிறது.

The post இலங்கை பிரதமருடன் பிரபுதேவா சந்திப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: