தமிழ்நாட்டின் உரிமைக்காகத் தான் டெல்லி சென்றேன்; உறுதியாக, கருணாநிதி வழியில் நின்று சாதிப்பேன்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை என் மீது மக்களுக்கு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை திருவான்மியூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர், “நான் துபாய்க்கு பல கோடி ரூபாயை எடுத்துசென்றதாக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதற்கு எனக்கு முன்பு இங்கு பேசியவர்களே பதில் சொல்லிவிட்டார்கள். அதேபோல், இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு மூன்று நாட்கள் சென்றிருந்தேன். அப்போது, நம் மாநிலத்திற்கு தேவையான கோரிக்கைகளை எல்லாம், பிரதமரிடத்திலும், அந்ததந்தத் துறை அமைச்சர்களிடத்திலும் வலியுறுத்தி, உரிமைக்கு குரல் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். இதனை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமலும், மூடிமறைக்கவும் சிலர், ஏதோ அச்சத்தின் காரணமாக, பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக்கொண்டு என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக டெல்லி சென்றேன் எனச் சொல்லிவருகிறார்கள். ஒன்றை மட்டும் நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். நான் அங்கு சென்று யார் காலிலும் விழுந்து ‘எனக்கு இது செய்து தாருங்கள்’ என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத் தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, பதவி ஏற்றபோதே சொன்னேன் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’. கலைஞரின் மகன் என்றைக்கும் தமிழ்நாட்டிற்காக உழைப்பான்” என்று பேசினார்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி மூலம் மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிப்பு எனவும் அவர் பேசியுள்ளார்….

The post தமிழ்நாட்டின் உரிமைக்காகத் தான் டெல்லி சென்றேன்; உறுதியாக, கருணாநிதி வழியில் நின்று சாதிப்பேன்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: