வாங்கண்ணா வணக்கங்கண்ணா

ஒரு எம்எல்ஏவுக்கும், ஒரு யூடியூபருக்கும் இடையே ஏற்படும் பிரச்னையும், அதிலிருந்து யூடியூபர் தப்பித்தாரா என்பதையும் மையமாக வைத்து உருவாகியுள்ள படம், ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’. கதையின் நாயகனாக காமெடி நடிகர் செந்தில், ஹீரோவாக சுந்தர் மகா, ஹீரோயினாக அபிநய, எம்எல்ஏவாக நதியா வெங்கட், சமூகப் பொறுப்பாளராக லட்சுமணன், பத்திரிகையாளராக ஷிபு சரவணன் நடித்துள்ளனர்.

ஒரேநாளில் நடந்து முடியும் முழுநீள காமெடி படமான இதில் சன்னி பாபு காமெடி செய்துள்ளார். தீபக் தமிழ்ச்செல்வன் ஒளிப்பதிவு செய்ய, ஜோசப் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். சுந்தர் மகா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார். ராஜ் கண்ணாயிரம் இயக்கியுள்ளார். யாஸ்மின் பேகம், மணிமேகலை லட்சுமணன் இணைந்து தயாரித்துள்ளனர்.

The post வாங்கண்ணா வணக்கங்கண்ணா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: