பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் (டிசிடியூ) மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமையில் நடந்தது. மூத்த தலைவர்கள் ஆமோஸ், சி.எம்.பொன்னுசாமி, அப்துல் காதர், நீலகிரி ராமசாமி, சாந்தா ராமதாஸ், தங்கராஜ், பொது செயலாளர்கள் கண்ணன், ஜி.கோதண்டன், சத்தியபாலன், கொள்கை பரப்பு செயலாளர் குமரி மகாதேவன், எச்எம்எஸ் மூத்த தலைவர் சுப்ரமணியம், சஞ்சய் பங்கேற்றனர். கூட்டத்தில், ஒன்றிய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளையும், நாளை மறுதினமும் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் டிசிடியூ சார்பாக மாநிலம் முழுவதும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கவுரவ தலைவராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காப்பாளர்-பி.டி.ஷிவராமன், மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன், பொது செயலாளர்கள்- செங்கை கண்ணன், ஜி.கோதண்டன், சட்ட ஆலோசகர்- மணிகண்டன், ஆலோசகர்- வி.சத்தியபாலன், பொருளாளர் -ஆர்.ராஜேஷ், வடசென்னை மாவட்ட தலைவராக டி.எஸ்.தேசியமணி, மத்திய சென்னை- எஸ்.தனலட்சுமி, தென்சென்னை- மயிலை கணேஷ், திருவள்ளூர் வடக்கு- ஏ.தாஸ், திருவள்ளூர் தெற்கு- எம்.ரவிச்சந்திரன், செங்கல்பட்டு-ஆர்.ஸ்டெல்லா மோத்தி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட தலைவர்கள், மாநில துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது….

The post பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: