டொரண்டோ பட விழாவில் சுசி கணேசன் படம்

சென்னை: டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில், சுசி கணேசனின் ‘தில் ஹே கிரே’ என்ற இந்தி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படம் நேற்று வேர்ல்ட் பிரீமியர் ஆக திரையிடப்பட்டது. உத்தரபிரதேச காவல்துறையை மையமாக வைத்து உருவாகியுள்ள இதில் வினித் குமார் சிங், அக்‌ஷய் ஓபராய், ஊர்வசி ரவ்ட்டேலா நடித்துள்ளனர். எம்.ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ளார். கூரையில்லாத வீடுகளில் வாழ்வதைப்போல் வசிக்கும் இன்றைய சோஷியல் மீடியா உலகில், அந்தரங்கம் களவு போனால் நடக்கும் ஆபத்து பற்றி அலசும் இப்படம் தேர்வானது குறித்து சுசி கணேசன் கூறுகையில், ‘இந்திய அரசின் தேர்வு என்பது, இப்படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். முதல் காட்சியே டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதால், உலக மார்க்கெட்டின் பார்வை இப்படத்தின் பக்கம் திரும்பியுள்ளது’ என்றார்.

The post டொரண்டோ பட விழாவில் சுசி கணேசன் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: