விடுமுறை தினமான நேற்று ஏராளமானோர் குவிந்தனர் ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

சித்தூர் : சித்தூர் ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அதேபோல் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயில் உண்டியலில் தங்கம், பணம், வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தி செல்கிறார்கள். நேற்று முன்தினம், நேற்று விடுமுறை நாட்கள் என்பதால் எப்போதும் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் வரிசையில் தண்ணீர் பால், மோர் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் போலீசார் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் தீர்த்த பிரசாதங்கள் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது….

The post விடுமுறை தினமான நேற்று ஏராளமானோர் குவிந்தனர் ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: