விஜய் சேதுபதியின் 50வது படம் ‘மகாராஜா’

சென்னை: பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்த ரம், தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள படம், விஜய் சேதுபதி நடிப்பில் 50வது படமாக உருவாகியுள்ளது. இதை ‘குரங்கு பொம்மை’ என்ற படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, அபிராமி, அருள்தாஸ், முனீஷ்காந்த், ‘பாய்ஸ்’ மணிகண்டன், சிங்கம்புலி, பாரதிராஜா, பி.எல்.தேனப்பன், வினோத் சாகர், சரவணன் சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, கல்கி, காளையன் நடித்துள்ளனர்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, அஜனீஷ் பி.லோக்நாத் இசை அமைத்து இருக்கிறார். நித்திலன் சாமிநாதன், ராம் முரளி இணைந்து வசனம் எழுதியுள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே 2011ல் டி.மனோகரன் இயக்கத்தில் சத்யா, அஞ்சலி, நாசர் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படத்துக்கும், இப்படத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

The post விஜய் சேதுபதியின் 50வது படம் ‘மகாராஜா’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: