சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க, ‘ரங்கூன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் பெயரிடப்படாத படத்தில், முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி. இந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. அங்கு தனக்கு படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில், இயற்கை அழகை ரசிப்பதற்காக வெளியே செல்லும் சாய் பல்லவி, அங்கு செம ஜாலி மூடில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், காஷ்மீர் பகுதியிலுள்ள அமர்நாத் கோயிலுக்கு பாத யாத்திரையாகச் சென்ற சாய் பல்லவி, அங்குள்ள பனி லிங்கத்தை வழிபட்டார். ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்த சாய் பல்லவி, அப்படங்கள் எதிர்பார்த்த வெற்றிபெறாத நிலையில், தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க முன்னுரிமை கொடுத்து வருகிறார்.
The post அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்த சாய் பல்லவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.