தியேட்டர் கட்டணம் உயருகிறதா

சென்னை: இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தற்போது தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் கட்டணம் குறைவாக இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையிலும் தியேட்டர்களுக்கு மக்கள் வருவது குறைந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு 250 ரூபாய் ஆகவும், சிங்கிள் தியேட்டர்களுக்கு 200 ஆகவும், ஏசி இல்லாத தியேட்டர்களில் 120 ஆகவும் டிக்கெட் கட்டணம் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதற்கு அரசு அனுமதி அளித்தால் சினிமா டிக்கெட் கட்டணம் இரண்டு மடங்கு அளவுக்கு உயரும் நிலை ஏற்படும்.

The post தியேட்டர் கட்டணம் உயருகிறதா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: