பொதட்டூர்பேட்டையில் கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டையில் நடந்த கங்கையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பழமையான கங்கையம்மன் ஆலயம் சமீபத்தில் திருப்பணிகள் நடைபெற்று புதிதாக கோபுரம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து, கோயில் மகா கும்பாபிஷேகம் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 3 நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்றது‌. விழாவையொட்டி, யாக சாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு மேல் 3ம் கால கலச பூஜைகள் தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடைபெற்று மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் மத்தியில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்கள் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டதும் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்‌. இதனைத்தொடர்ந்து, அம்பாளுக்கு அபிஷேகம் ஆராதனை பூஜைகள் செய்யப்பட்டு அலங்காரத்தில் தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார். திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது….

The post பொதட்டூர்பேட்டையில் கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: