கோவை காந்திபுரத்தில் மர்ம சூட்கேஸ் ஏற்படுத்திய பரபரப்பு

கோவை: குண்டு வெடிப்பு தினத்தில் காலியாக கிடந்த மர்ம சூட்கேசால் காந்திபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகரில் கடந்த 1998 பிப்ரவரி 14-ம் தேதி குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு தினத்தையொட்டி கோவையில் தமிழக சிறப்பு அதிரடிப்படை, வெள்ளலூரில் உள்ள மத்திய அதிவிரைவுப்படை போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கூட்டத்தை கலைக்கும் விதமாக கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனம் ஆகியவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் சீருடை அணியாத போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று காலை காந்திபுரம் மேம்பாலத்திற்கு அடியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்தது. நீண்ட நேரமாக அதனை யாரும் எடுக்காததால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சூட்கேசை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். எந்த பொருட்களும் இன்றி அந்த சூட்கேஸ் காலியாக இருந்தது. அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்….

The post கோவை காந்திபுரத்தில் மர்ம சூட்கேஸ் ஏற்படுத்திய பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: