மோகன்லால் தங்கை மகன் ஹீரோ


சென்னை: தமிழில் உருவாகும் படத்தில் மோகன்லாலின் தங்கை மகன் நிகில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இதில் பெங்களூரை சேர்ந்த புதுமுகம் நேத்ரா ஹீரோயினாக நடிக்கிறார். மற்றும் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர், வின்சென்ட் அசோகன், சுப்பு, சங்கீதா, மாறன், சுவாமிநாதன், தனி மற்றும் பலர் நடிக்கிறார்கள். தொட்டி ஜெயா, சக்கரைகட்டி, என்னமோ நடக்குது உள்பட பல படங்களில் இணை இயக்குனராக பணி புரிந்த ஜூட் ரோமரிக் இயக்குகிறார்.

அவர் கூறும்போது, ‘மலையாளத்தில் நிகில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இதுதான் முதல் படம். இன்று தொடக்க விழா நடைபெற்றது. வாழ்கையில் சில நேரங்களில் நடக்கும் விஷயம் நம்மை பயப்படுத்தி தவறான முடிவு எடுக்க தூண்டும். ஆனால் சற்றே சிந்தித்தால், என்ன நடந்தது என்பதற்கும், என்ன நடக்கிறது என்பதற்கும் சம்பந்தமே இருக்காது. கதையின் நாயகன் வாழ்வில் நடக்கும் இப்படி ஒரு சம்பவத்தை நகைச்சுவை கலந்த அழகான காதல் கதையாக கூறும் திரைப்படம்தான் இது’ என்றார்.

The post மோகன்லால் தங்கை மகன் ஹீரோ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: