கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு!!!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இதற்கிடையே, உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனையடுத்து, பர்தா அணிந்து வந்த மாணவிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவிகளும் காவி ஷால் அணிந்து ஊர்வலம் சென்றனர். ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகளைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால் நாங்கள் காவி ஷால் அணிந்து தான் கல்லூரிக்கு வருவோம் என்று அவர்கள் கூறினார். குறிப்பாக, ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள் விரட்டியடித்த காட்சி, அதேபோல சிமோகா மாவட்டத்தில் தேசிய கொடியை இறக்கிவிட்டு காவிக்கொடியை ஏற்றிய விவகாரம் என்பது போன்ற விசயங்கள் நடந்து வந்த சூழலில், தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஹரிஹரா என்ற பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கர்நாடகா மாநிலத்தின் தாவண்கரே மாவட்டத்தில் ஹிஜாப் தொடர்பான போராட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

The post கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு!!! appeared first on Dinakaran.

Related Stories: