ஓபிஎஸ் வெளியேறியது பாதிப்பை ஏற்படுத்தாது: எச்.ராஜா பேட்டி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பாஜ தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜ கூட்டணியில் இருப்பது அவரவர் விருப்பம். ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து வெளியேறியது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலர் வெளிமாநிலங்களில் வசித்து வருகிறார்கள். அங்கு தேர்தல் நடக்கும் போது அவர்கள் அங்குள்ளவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். அதேபோல் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் வசிக்கும் போது அவர்கள் தேர்தலின் போது தமிழகத்தில் வாக்களிக்க முழு உரிமை உண்டு.இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: