மதுரை, ஜூலை 21: மாவட்ட வனத்துறை தரப்பில் எட்டு வனச்சரகங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது. மதுரை மாவட்ட வனத்துறை சார்பில், வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கவும், பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவும் மாவட்ட வன அலுவலர் தருண்குமார் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி மாவட்டத்தில் உள்ள கொடிமங்கலம், பெருமாள்மலை.
இலந்தைகுளம், வலசேரிபட்டி, உத்தப்பநாயக்கனூர், விக்கிரமங்கலம், சிறுமலை உள்பட எட்டு இடங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊர்வனம் அறக்கட்டளை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், அந்தந்த வனச்சரகங்களை அடுத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் இடையிலான மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு வனம் சார்ந்த இடையூறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
The post மாவட்ட வனப்பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் appeared first on Dinakaran.
