அனுமதியின்றி புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

 

தா.பழூர், டிச.10: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினர் வி.கைகாட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர். அப்போது வி.கைகாட்டியைச் சேர்ந்த அன்னக்கிளி (55) என்பவரது பெட்டி கடையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து அன்னக்கிளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: