திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

 

திருச்சி,டிச.10: திருச்சி மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சாிபார்ப்பு பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற தோ்தல், 2026-ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சாிபார்ப்பு பணிகள் டிச. 11 முதல் மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சாிபார்ப்பு பணிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சாிபார்ப்பு பணிக்காக, 11 பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்., நிறுவனத்தின் (பெல்) பொறியாளா்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இந்திய தேர்தல் ஆணையத்தால் திருச்சி மாவட்டத்திலிருந்து, 400 எண்ணிக்கையிலான ballot unit-கள் அரியலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories: