தஞ்சையில் மை பாரத் அமைப்பின் வாயிலாக அடிப்படை பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெற்றது

 

தஞ்சாவூர், டிச.10: இந்திய அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் கீழ் இயங்கும் மை பாரத் அமைப்பின் மூலமாக கடந்த எட்டாம் தேதி முதல் 10ம் தேதி வரை மூன்று நாட்கள் அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாம் தஞ்சாவூர் இளைஞர் விடுதியில் நடைபெற்றது. இதில் 35 ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியை விஜயா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேலும் பேராசிரியர் சுகுமார், விரிவுரையாளர் சொர்ணா சூரியமூர்த்தி, முதலமைச்சரின் சிறந்த இளைஞர் விருது பெற்ற கவின் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: